top of page
தமிழ் இலக்கியம் 
முதல் தாள் 
பிரிவு "அ" 

பகுதி 1: தமிழ் மொழி வரலாறு

முதன்மையான இந்திய மொழி குடும்பங்கள் - இந்திய மொழிகளுக்கிடையே பொது நிலையிலும், குறிப்பாக திராவிட மொழிகளிலும் தமிழ் மொழி பெறும் இடம் - திராவிட மொழிகளின் வகைப்பாடும் அவை பரவியுள்ள தன்மையும்.

சங்ககாலத் தமிழ் - இடைக்காலத்தமிழ்: பல்லவர் காலத் தமிழ் மொழி அமைப்பு மட்டும்- தமிழில் பெயர், வினை, பெயரடை, வினையடை, கால இடைநிலைகள் மற்றும் வேற்றுமை உருபுகள் ஆகியவற்றின் போக்கு பற்றிய வரலாற்று நோக்கிலான ஓர் ஆய்வு.

பிறமொழிகளில் இருந்து தமிழ் மொழி பெற்ற சொற்கள்- தமிழில் வழங்கப்படும் சமூக மற்றும் வட்டார கிளை மொழிகள்- பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்குமான வேறுபாடு.

குதி 2: தமிழ் இலக்கிய வரலாறு

தொல்காப்பியம் - சங்க இலக்கியம் - அகம், புறம் எனும் பாகுபாடு - சங்க இலக்கியத்தில் மதச்சார்பற்ற பண்புகள் - நீதி இலக்கியங்களின் வளர்ச்சி - சிலப்பதிகாரமும் மணிமேகலையும்.

 

பகுதி 3: பக்தி இலக்கியம் (ஆழ்வார்களும் நாயன்மாரகளும்)

ஆழ்வார் பாடல்களில் நாயக நாயகி பாவனை - சிற்றிலக்கிய வடிவங்கள் (தூது, உலா, பரணி, குறவஞ்சி,).நவீன கால தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்கான சமூக காரணிகள்; புதினம், சிறுகதை, புதுக்கவிதை – இக்கால படைப்புகளில் பல்வேறு அரசியல் கொள்கைகளின் தாக்கம்.

பிரிவு "ஆ"

பகுதி 1: தமிழ் ஆய்வின் இன்றைய போக்கு

திறனாய்வு அணுகுமுறைகள்: சமூகம், உளவியல், வரலாறு, ஒழுக்கமுறை - திறனாய்வின் பயன்கள் - பல்வேறு இலக்கிய உத்திகள்; உள்ளுறை, இறைச்சி, தொன்மம்,உருவகம் (தொடர்  உருவம்) அங்கதம், மெய்ப்பாடு, படிமம், குறியீடு, இருண்மை-ஒப்பிலக்கியக் கருத்துரு-ஒப்பிலக்கியக் கோட்பாடுகள்.

 

பகுதி 2: தமிழில் நாட்டுப்புற இலக்கியங்கள்

கதைப்பாடல்கள், பாடல்கள், பழமொழிகள்,  விடுகதைகள்- நாட்டுப் புறப்பாடல்களில் சமுதாய ஆய்வு- மொழிபெயர்ப்பின் பயன்கள்-தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற மொழிபெயர்ப்புகள்-தமிழில் இதழியல் வளர்ச்சி.

பகுதி 3: தமிழரின் பண்பாட்டு மரபு

காதல் மற்றும் போர் பற்றிய கருத்துகள்-அறக்கருத்துகள்-பழந்தமிழர் போரில் பின்பற்றிய ஒழுக்க நெறிமுறைகள்- ஐந்தினைகளில் மரபுகள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள்.

சங்க மருவிய காலத்தின் பண்பாட்டு மாற்றங்கள்-இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்பு (சமணமும் பெளத்தமும்). காலந்தோறும் கலை, கட்டிடக்கலையில் ஏற்பட்ட வளர்ச்சி  (பல்லவர்,  பிற்காலச்சோழர், நாயக்கர் காலம்). தமிழ்ச் சமுதாயத்தின் மீது ஏற்பட்ட பல்வேறு அரசியல், சமூகம், சமயம்,  பண்பாட்டு  இயக்கங்களின் தாக்கம். இக்கால தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு மாற்றத்தில் வெகுசன ஊடகங்கள் பெரும் பங்கு.

இரண்டாம் தாள்

பிரிவு "அ"

பகுதி 1: பழந்தமிழ் இலக்கியம்

1.குறுந்தொகை (1-25 பாடல்கள்)

2.புறநானூறு (182–200 பாடல்கள்)

3. திருக்குறள், பொருட்பால்-அரசியலும் அமைச்சியலும் (இறைமாட்சி முதல் அவை அஞ்சாமை முடிய)

பகுதி 2: காப்பியம்

1. சிலப்பதிகாரம் (மதுரைக் காண்டம் மட்டும்)

2. கம்பராமாயணம் (கும்பகருணன் வதைப் படலம்)

பகுதி 3: பக்தி இலக்கியம்

1. திருவாசகம்: நீத்தல் விண்ணப்பம்

2. திருப்பாவை: (முழு பகுதியும்)

பிரிவு "ஆ"

நவீன இலக்கியம்

பகுதி 1: கவிதை

1. பாரதியார்: கண்ணன் பாட்டு

2. பாரதிதாசன்: குடும்ப விளக்கு

3. நா காமராசன் : கருப்பு மலர்கள்

உரைநடை

1. மு வரதராசனார்: அறமும் அரசியலும்

2. சி என் அண்ணாதுரை: ஏ தாழ்ந்த தமிழகமே!

பகுதி 2: நாவல், சிறுகதை, நாடகம்

1. அகிலன்: சித்திரப்பாவை

2. ஜெயகாந்தன் : குருபீடம்

3. சோ: யாருக்கும் வெட்கமில்லை

பகுதி 3: நாட்டுப்புற இலக்கியம்

1. முத்துப்பட்டன் கதை: நா.வானமாமலை (பதிப்பு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்)

2. மலையருவி: கி வா ஜெகந்நாதன் (பதிப்பு: சரஸ்வதி மகால், தஞ்சாவூர்)

bottom of page